புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குப் மிரட்டல் விடுத்து காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரும் நவ.19-ம் தேதிக்கு பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். ஏர் இந்தியா விமானத்துக்கு பகிரங்கமாக அவர் விடுத்துள்ள மிரட்டல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் நிறுவனரன் தான் இந்த குர்பத்வந்த் பன்னூன். இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கோரும் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தான் குர்பத்வந்தின் எஸ்எஃப்ஜெ அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.






