ஐடி நோட்டீஸை எதிர்த்த மனுவை வாபஸ் வாங்கினார் ஒ.பன்னீர் செல்வம்

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரியும், மேல் நடவடிக்கைக்கு தடை கோரியும்ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் ஆஜரான ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.