ஒடிசா ரயில் விபத்து போன்ற போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? : மோடியும், ரயில்வே அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும்

ஒடிசா ரயில் விபத்து போன்ற போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் காரணம் என்பதற்கு பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும்   பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. அத்துடன் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் சுமார் 280ற்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தாதகவும் கூறப்படுகிறது. 

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி, தாங்கள் முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சிறந்த பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நான் பல கேள்விகளை கேட்க வேண்டும். இது  போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் காரணம் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்,ஆனால் இன்று நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மல்லிகார்ஜூன் கார்கே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக டிவிட்டரில், ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த வருத்தம். நமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. மீட்பு பணிகளை விரைவுப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய