குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக அனைத்துக் கட்சி கூட்டம்…!

புதுடெல்லி:
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 23 கட்சிகளைச் சேர்ந்த 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முதல்நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். ஆனால், நாளை 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் ஒரு நாள் முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. வருகிற நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் ஏதிர்பார்த்து காத்துள்ளனர்

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் திவாரி, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது. சில கருத்துக் கணிப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. ஆனால், நாங்கள் எங்கள் தொண்டர்கள் மூலம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மிசோரத்தில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஐபிசி, சிஆர்பிசி, ஆவணச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய மூன்று சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற வழக்கில் சிக்கி உள்ள திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்படுவார் எனற கேள்வி அரசியல் வல்லுனர்கள் மத்தில் நிலவியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு