சுரங்கப்பாதையில் வெள்ளம் – போக்குவரத்து நிறுத்தம் – வியாசர்பாடி கணேசபுரம்….

சென்னையில் ஒருநாள் பெய்த மழையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது. காலை 8 மணி வரை அந்த பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்து மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதையில் தேங்கியது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன. சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் செல்லவில்லை. அங்கு சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பெரம்பூர், பேசின்பாலம் வழியாக மக்கள் போக்குவரத்தை தொடர்ந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.