அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

சென்னையில் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு 2026 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது

Posted On: 12 NOV 2025 5:48PM by PIB Chennai

தமிழ்நாடு அறிவியல் சங்கம், சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு, சென்னையில் உள்ள  – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் 2026 பிப்ரவரி 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிலையான வளர்ச்சி என்பதாகும். இம்மாநாடு தமிழ் மொழி வாயிலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனித்துவமான தளம் ஆகும். இந்த மதிப்புமிக்க நிகழ்வு, பல்வேறு அறிவியல் களங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க, புகழ்பெற்ற அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைக்கும்.

இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி 2025 நவம்பர் 12 அன்று சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி மையத்தில் நடைபெற்றது. அந்த மையத்தின் ஆலோசகர் எஸ் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். விஞ்ஞான பாரதி  அமைப்புக்கான தென்மண்டல அமைப்பு செயலாளர் திரு ஆர் அப்கா, மாநாட்டின் கருத்துக் குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாடு அறிவியல் சங்கத்தைச் சேர்ந்தவரும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முன்னாள் இயக்குநருமான டாக்டர் பி சந்திரசேகரன் இம்மாநாடு குறித்து எடுத்துரைத்தார். இதற்கான அதிகாரப்பூர்வ சுவரொட்டியையும் மாநாட்டிற்கான இணையதளத்தையும்  சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவள்ளி வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் வி பார்த்தசாரதி நன்றி தெரிவித்தார்.

பாரம்பரிய அறிவமைப்புகளை நவீன அறிவியல் சிந்தனையுடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவியலை முழுவதுமாக ஆழ்ந்து புரிந்துகொள்வதற்கான ஒரு ஊடகமாக செம்மொழியாம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை இது எடுத்துரைக்கிறது. சிஎஸ்ஐஆர், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இஸ்ரோ மற்றும் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இம்மாநாட்டில்  பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்