சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்; ஆர்.எஸ்.பாரதி

சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கூறியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய கோரியும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் தொடர் முழுக்க கூட்டங்களை நடத்தினர்…. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி கிரிராஜன், மதிமுக மாநில பொருளாளர் செந்தில் அதிபன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றக் கூறி பலமுறை ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழனை வழக்காடும் முறையாக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்க ஒன்றிய அரசு தயங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
மெட்ராஸ் ஹைகோர்ட் என்கின்ற வார்த்தையை சென்னை உயர்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என கூறினால் என்ன தப்பு இருக்கிறது. எனவே தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு உணர்வு கம்மி ஆகிவிட்டது என்பதை நான் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் சம்பாதிக்க ஆரம்பித்த நிலை வந்தவுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று மட்டுமே அனைவரும் எண்ணுகிறார்கள். ஆங்கிலம் என்று கூறி தமிழை எங்கெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அங்கே எல்லாம் எழுச்சி உருவாக வேண்டும்.
18 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதற்கு விடிவுகாலம் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே நமது முதல்வர் தற்பொழுது மீண்டும் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அனுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் இந்தியில் வழக்காடு பொழுது ஒத்துக்கொள்ளக் கூடியவர்கள் தமிழில் வழக்காடினால் என்ன குறை வந்துவிடப்போகிறது. இதற்கான மாறுதல் தமிழ்நாட்டில் தற்பொழுது மேலோங்கி உள்ளது.
இதனை நாம் மிகவும் வேகமாக போராடி பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. பலவேறு மாற்றங்களை ஒன்றிய அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது இன்னும் சிறிது காலம் மௌனம் காத்தாலும் இந்தியில்தான் அனைத்து வழக்கங்களும் வழக்காட வேண்டும் என்கின்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற மொழியாக மாற்றியாக வேண்டிய கால கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது.
குறிப்பாக சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்ற நாம் அனுமதி அளிக்க கூடாது. நம் மீதும் நம் மொழி மீதும் கை வைத்தால் விளைவுகள் பலமாக இருக்கும் என்பதனை வடமாநிலத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி அந்த சினை தமிழ்நாடு அரசு பெற்றதைப் போல இதையும் தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் பெறும்.” என்றார்.
கூட்டத்திற்கு வழக்கறிஞர் கு.பாரதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் க.சக்திராணி வரவேற்றார். வழக்கறிஞர் ம.பாரி நோக்க உரையாற்றினார்…. மதிமுக மாநில பொருளாளர் செந்தில் அதிபன் தொடக்க உரையாற்றினார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் எம்எல்ஏ., மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா, தமிழ்த் தேச விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் சு.க.முரகவேல்ராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ் மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர பொழிலன், வழக்கறிஞர் தோழர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத