விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கை!சென்னை நிருபர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ரங்கராஜ் தலைமையில் இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் (கில்டு) நடைபெற்றது.இக்கூட்டத்தில் செயலாளர் சேகர், துணைத் தலைவர் திரு.மோகன், பொருளாளர் ஸ்காட், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்தப்பட்டனர்.சென்னை நிருபர்கள் (கில்டு)சங்க தலைவராக மோகன்ராஜ் பாபு என்கிற ஆர்.மோகன் தாரா, செயலாளராக சி.பாஸ்கரன், பொருளாளராக ஏ.வேல்முருகன், துணைத் தலைவராக கே.குமார், துணைச் செயலாளராக ஆர்.சங்கர்,செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் எஸ்.ராஜேந்திரன், ஜி.சீனிவாசன், ஜி.கதிர்வேல், பி.சிங்காரவேலன், பி.நிலாவேந்தன், பி.பூர்ணிமா ஆகியோரை முன்னாள் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர்.இதைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கில்டு வளர்ச்சி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து முடிவு செய்யப்பட்டது.விரைவில் அதற்கான தேதி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






