சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகள்; தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை:
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டம் கட்டம் இரண்டில் 118.9 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித்தடங்கள் 128 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ரூ.63,246 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான முதலாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் நீலகிரி ஆனது மொத்த நீளமான 1400 மீட்டரில் 700 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் பொதிகை ஆனது மொத்த நீளமான 1400 மீட்டரில் 250 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான மூன்றாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை மொத்த நீளமான 400 மீட்டரில் 100 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான நான்காவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் சேர்வராயன் ஆனது சுரங்கம் தோண்ட செலுத்துவதற்கு தயாராக உள்ளது. வேணுகோபால் நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள், வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கட்டுமானக் குழுவினருக்கு, குறிப்பாக பணியிடத்தை ஒட்டிய சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு தலைமைச் செயலர் அறிவுறுத்தினார். வழித்தடம் 5 இன் கீழ் உயர்த்தப்பட்ட தொகுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார். சுரங்கம் தோண்டும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார்.
சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முன் பகுதிக்கு சென்று சுரங்கம் தோண்டும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்தார். சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்குள் பணியாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மற்றும் வாயுக்களின் அளவு பற்றியும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு