தமிழகத்தி தொடர்ந்து 4 நாள் மழைத்து வாய்ப்பு : பிரதீப்ஜான் முகநூல் பதிவு

தமிழ்நாட்டில் 4நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு  வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தனது தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப்ஜான் முகநூல் பக்கத்தில்  பதிவிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி  உள்ளது. இந்த நிலையில்,   வளிமண்டல கீழ் அடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று  இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி,  ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்கள் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தகவலை உறுதிபடுத்தும் வகையில், வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்து உள்ளார். அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று    தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,  தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, கொடைக்கானல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டையில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழை பெய்யும்.

ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை குறைந்து வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

அதுபோல முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஏப்ரல் முதல் பாதி வறண்ட வெப்ப மழைக்கு பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகாவுக்கு நல்ல செய்தி

டெல்டா, தென் தமிழகம், மேற்கு தமிழகம், கேரளா, கடற்கரை மற்றும் உட்புற கர்நாடகா, உள்புற தமிழகத்தின் பகுதிகளுக்கு நல்ல செய்தி. நீடித்த ட்ரோ மற்றும் ஈஸ்டர்லிகளுக்கு நன்றி, அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்யும்.

சென்னை வறண்டுதான் இருக்கும் ஆனால் ஈஸ்டர்லிகளுக்கு நன்றி வெப்பம் செக் ஆகும்.

பெங்களூரு 1 அல்லது 2 நாட்களுக்கு ஹிட் அல்லது மிஸ் மழை பெய்யும்

அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்ய ஹாட்ஸ்பாட்ஸ் – தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய