திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை:
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., ஜி.வி.மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும். மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சில முக்கிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதாவது “இனிவரும் காலங்களில் பொது வெளியிலோ மேடைகளிலோ மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன்” என மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட