16. பொறையுடைமை
பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (குறள்: 160)
விளக்கம்:
உண்ணாமல் நோன்பை மேற்கொள்ளுபவர் பெரியவரே ஆயினும் பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்த நிலைதான் அவர் பெறுவர்.






