20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
======================================================
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
விளக்கம்
ஒருவன் ஒரு பயனும் இல்லாத சொற்களை விரிவாகப் பேசுகின்ற பேச்சே அவன் விரும்பத்தகாதவன் எனப்தை மற்றவர்களுக்கு அறிவிப்பதாகும்.






