1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும். (குறள் : 121)
விளக்கம்:
அடக்கமாகிய நற்பண்பு ஒருவனை உயர்த்தித் தேவர் உலகில் சேர்க்கும்
அடங்காமையாகிய தீய பண்பு ஒருவனைத் தாங்குதற்கரிய இருள் உலகில்
சேர்த்துவிடும்.






