நாமக்கலில் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், எண்ணெய் நிறுவன அலுவலர்கள், வங்கி, அஞ்சல் துறையினர், மத்திய அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், விவசாயிகள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்தும் அரசு அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், விவசாயிகளின் வயல்களில் மெட்ராஸ் உர நிறுவனத்தின் உதவியுடன் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த செயல்முறை விளக்கத்தை கிராம மக்கள் பார்வையிட்டனர்.

இதே போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை, ரெட்டிப்பட்டி, சிவநாயக்கன்பட்டி, பழையபாளையம், அலங்காநத்தம், முத்துக்காபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு