புதுடெல்லி:
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் ஆகஸ்ட் 26, 2026 முதல் காணாமல் போயுள்ளார். அவர் கயிலாய யாத்திரை சென்றிருந்த போது இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை வேளையில் தனது மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. நேபாள எல்லையான திமுரே பகுதியில் உள்ள ஆயுதப்படை எல்லைச் சாவடிக்கு அருகே அவர் பயணித்த பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு மீட்கப்பட்ட மற்ற யாத்ரீகர்கள், நீதிபதியின் பேருந்து தங்களுக்கு மிக அருகில் (100 – 200 மீட்டர் தொலைவில்) இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம், இந்தியப் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஆகியோருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், மத்திய அரசு மற்றும் நேபாள அதிகாரிகளின் உதவியுடன் நீதிபதி சிவஞானத்தை உடனடியாகக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவருடன் சென்ற சக யாத்ரீகர்கள் சிலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சிவஞானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை






