தமிழக ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 18 மறை மாவட்டங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தலில்- எந்த மறை மாவட்டத்தில் யார் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்ற விபரத்தை பொது நிலையினர் பேரவைக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொது நிலையினர் பேரவை முடிவெடுத்து ஆயர் பேரவைக்கு தெரிவித்து ஆயர்கள் அறிவிப் பார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கும் வரும் பேரா பத்தை எவ்வாறு நிவர்த்தி செய்வது. இதனால் ஏற்பட்டு வரும் மதகலவரங் களை கருத்தில் கொண்டு இன்றைய அரசியல் சிக்கலை தீர்க்க சில ஆலோசனைகளையும் அதை சரி செய்வதற்கான வழி முறை களையும் தமிழக ஆயர் பேரவை திட்டமிட்டு வரு கின்றனர். அதில் முக்கியமான ஒன்று நமது கத்தோலிக்க கிறித்துவ மக்களுக்கு இந்திய அரசியல் சட்டத் தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்திற்குள் நுழைவதாகும். சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பது பற்றியும் அதற்குரிய சட்ட பாதுகப்பை ஏற்படுத் துவதாகும். இதனை ஒவ்வொரு மறை மாவட்ட அளவிலும் அனைத்து பங்குகளிலும் உள்ள அன்பியங்கள் பங்கு பேரவை வழியாக அனைத்து மறை மாவட்டங்கள் தோறும் கருத்தரங்கம் பொதுக்கூட்டம் நடத்தி கிறிஸ்தவர்களை அரசியலில் செயல்படுவதற்கான பணிகளை பொதுநிலையினர்கள் பேரவையும் பங்கு தந்தையர்களின் உதவியோடு நடந்த வேண்டு மென்று கேட்டு கொண்டார்கள்.
இந்திய நாடு இன்று சனாதனத்தின் கொடுரமான பிடியில் சிக்கித்தவிக் கும் மிக நெருக்கடியான நிலையிலிருந்து இந்திய கிறித்தவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கிறிஸ்தவர்களாகிய நாம் மெத்தனமாக இருப்பது சரியல்ல என்று தமிழக ஆயர் பேரவை அரசியலுணர்வற்ற அனை த்து கிறிஸ்தவருக்கும் அழைப்பு விடுக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இறை மக்களை எல்லா பங்குக ளிலும் அதற்கு தயார்படுத்த வேண்டும் என்று இதற்கான பணிகளை முடுக்கிவிட அனைத்து பொதுநிலை இயக்கங்களும் அன்பி யங்களும் தனி நபர்களும் முன் வாருங்கள் என்று அழப்பு விடுக்கிறது. தேர்தலுக்கான அரசி யல் விழிப்புணர்வு கூட்டங் களை ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக நடத்தி வருகி றோம். இந்த களப்பணியில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தன்னார்வம் மிக்க கிறிஸ்தவ பொது நிலையினர் கீழே கொடுத் துள்ள பொது நியினர்கள் இயக்கத்தின் தலைவர்களை தொடர்பு கொள்ளவும். எந்த மறை மாவட்டத்தை சார்ந்தவர்கள் எந்த தொகுதியில் போட்டி இடபோகிறீர்கள் என்பதை முன் கூட்டி தெரிவித்தால் எத்தனை பேர் விருப்பம். தெரிவித்திருக்கிறார்கள் என்பதை திமுக அதிமுக தலைவர்களிடம் பேசி தமிழக ஆயர் பேரவையும் பொது நிலையினர் பேரவையும் கிறித்தவர்களுக்கு எத்தனை சீட் தருவார்கள் என்பதை ஆயர்கள் அறிவிப்பார்கள் என்று கேள்விபடுகிறோம்.
அ. டோணி புனித தேவச காயம், நிலையினர் இயக்கம், சென்னை செங்கல் பட்டுமறை மாவட்டம், சகோ.எஸ். ராபர்ட் – ம. அ.தேவராஜ், அன்பு நற்செயல் இயக்கம் தமிழ்நாடு, இருதயம் வல்லரசு தலைவர், மக்கள் மேம் பாட்டு கழகம் என்று கூறப்பட்டுள்ளது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





