புதுடெல்லி:
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ம் தேதி முதல் விவாதம் நடைபெறும் எனவும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி &- குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மோதல் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 19ம் தேதி ஒரு வீடியோ வெளியானது. அதில் குகி ஸோ இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்வலையை ஏற்படுத்தியது. இது உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் தொடர்ந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது.
கடந்த 26ம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அவருடன் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் அறிவித்ததோடு விவாதத்துக்கான நாளை பின்னர் அறிவிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





