மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை துவங்கி நடைபெற உள்ளது என அதிமுக தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அவர் தான் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்தார். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் மாறிமாறி மனு தாக்கல் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தநிலையில் கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு கழக பொதுச்செயலாளர்’’ கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என்ற விதிமுறைக்கு ஏற்க கழக பொதுச்செயலாளர்’’ பொறுப்பிற்கான தேர்தல் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.
கழக பொதுச்செயலாளர்’’ பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத்தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கழக சட்டவிதி 20 அ பிரிவு – 1, (ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை நடக்கிறது.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராவது உறுதியாகி உள்ளது. மேலும் அவரை எதிர்த்து கட்சி சார்பில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான கனவு நனவாக உள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400