தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரை சேர்ந்தவர் விஜய் (44). மீனவர். இவர் பட்டா பெயர் மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்று பெற விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்காக பொறையாறு (பொ) விஏஓ பாண்டியராஜன் (30), ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி விஜய், மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் ஆலோசனையில் பேரில் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயுடன் பொறையாறு விஏஓ அலுவலகத்துக்கு சென்று விஏஓ பாண்டியராஜனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், விஏஓவை கைது செய்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






