மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்வு…

மும்பை: பங்குசந்தையில் இன்று காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 15.64 புள்ளிகள் உயர்வடைந்து 65,801.28 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வெள்ளிக்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவடைந்து 65,644 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி42 புள்ளிகள் சரிந்து 19,454 ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கிய போதிலும் பின்னர் ஏற்றம் அடைந்தது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 15.64 புள்ளிகள் உயர்வடைந்து 65,801.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.75 புள்ளிகள் உயர்ந்து 19,510.05 ஆக இருந்தது.

அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளால் பணவியல் கொள்கை மேலும் இறுக்கம் அடையலாம் என்ற அச்ச உணர்வானால் உலகளாவிய சந்தைகளில் எதிர்மறை சூழல்கள் நிலவியது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ். டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றதில் இருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட