அண்டார்டிகாவில் மிகக் குறைந்த கடல் பனி உறைவு : புவி அறிவியல் அமைச்சகம்

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயுடன் இணைந்து, டாக்டர் பாபுலா ஜெனா மற்றும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் சகாக்கள் தலைமையிலான சமீபத்திய ஆய்வு, 2023-ம் ஆண்டில் வருடாந்தர பனி அதிகரிப்புக்கு முன்னதாக அண்டார்டிக் பனி விரிவாக்கம் மற்றும் பனி பின்வாங்கலில் முன்னெப்போதும் இல்லாத தடங்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலைமையை அறிவித்துள்ளது. புவி வெப்பமடைதலின் பின்னணியில், கடந்த தசாப்தத்தில் ஆர்க்டிக் கடல், பனியின் குறிப்பிடத்தக்க இழப்பைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் அண்டார்டிக் 2015 வரை மிதமான அதிகரிப்பைக் கண்டது. ஆனால் 2016 முதல் திடீரெனக் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, 2016 முதல் 2023 வரை ஒவ்வொரு கோடையிலும் அண்டார்டிக் மிகக் குறைந்த கடல் பனி நிலைமைகளைக் கண்டது, 2023 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில், மெதுவான பனி விரிவாக்கம் அல்லது பின்வாங்கல் ஏற்பட்டது. அண்டார்டிகாவில் வருடாந்திர அதிகபட்சத்திற்கு முன்னதாக மெதுவான பனி விரிவாக்கம் 2023, செப்டம்பர் 7 அன்று 16.98 மில்லியன் சதுர கிமீட்டரில் பனி அளவு இருந்தது. இது நீண்ட கால சராசரியை விட 1.46 மில்லியன் சதுர கிமீ குறைவானது. கடல் பனிக்கட்டி மாற்றங்களின் அடிப்படைக் காரணம் விஞ்ஞான சமூகத்திற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் பனி விரிவாக்கத்தைக் குறைக்க அதிகப்படியான கடல் வெப்பம் பங்களித்தது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன, ஆனால் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் கணிசமானவை மற்றும் முக்கிய பங்கு வகித்தன. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், துருவ மற்றும் பெருங்கடல் அறிவியலில் நாட்டின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.