பெருநகர சென்னை மாநகராட்சி தேனாமபேட்டை மண்டலம், வார்டு 110க்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலைகள் அமைக்க பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேயர் ஆர்.பிரியா இன்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டு, சாலைப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, தலைமைப் பொறியாளர் (பொது), ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.