அன்னையர் தின வாழ்த்து : எடப்பாடி பழனிச்சாமி…!

ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய் அன்புக்கு ஈடாகாது. பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது. தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும், அன்பையும் கொண்டிருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும், குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும்; அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் கொண்டாடுவதே அன்னையர் தினமாகும். இந்த நன்னாளில், அன்னையரின் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும், அவர்கள் மீது அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ்நாளெல்லாம் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கருவில் இருந்தே கற்றுத் தருவது அம்மா தான். கனவு, ஆசை, லட்சியம் முதலானவற்றை துறந்து தன் குடும்பதிற்காக மட்டுமே வாழ்பவர் அன்னை. இத்தகைய போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த `அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். என தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அன்னையர் தின வாழ்த்து : எடப்பாடி பழனிச்சாமி…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube