அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

வெப்ப அலை பாதிப்பு : மத்திய அரசின் தீவிர நடவடிக்கை…!

வெப்ப அலை பாதிப்பை தடுப்பதற்கு மத்திய அரசின் துறைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநரும், தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்புடன் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் வெப்ப அலை குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் தொடர்ந்து ஒலிபரப்பப்படுவதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் வெப்ப அலை நிலைமை குறித்தும், காட்டுத் தீ, மருத்துவமனைப் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய வானிலை ஆய்வு மையம், மண்டல வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் வெப்ப அலை தடுப்புக்கான செயல் திட்டத்தை அவ்வப்போது உருவாக்கி மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். காட்டுத் தீயை கையாள்வது எப்படி என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவமனைகளில் மின்கசிவால் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், வெப்ப அலை பாதிப்பிலிருந்து பாதுகாத்துகொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.

மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு கட்ட தேர்தல் தேதிக்கு முந்தைய ஐந்து நாட்களில் வெப்ப அலையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். செல்பேசி செயலிகளில் மௌசம் செயலிலை பதிவிறக்கம் செய்து கொண்டு வெப்ப அலை தொடர்பான சிறப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் பேசுகையில், நாட்டில் உள்ள பெரும்பாலான சமவெளிப்பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பம் காணப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்