அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை:
சட்டமேதை டாக்டர் அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அம்பேத்கருக்கு சிலை, உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து விசிக தலைவர் தொ.திருமாவளவன், அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
“பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்தச் சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் இலட்சியங்களை நெஞ்சிலேந்தி, சமத்துவநாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்! மானுடத்தின் பொருள்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.