கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கோட்டூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து, கோவை மாவட்ட வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
