மாநகராட்சி பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகளில் நடைபதைகளை நடப்பதற்கேன்றே என்ற வாசகம் பொறித்த பாதகைகளை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து நடைபாதைகளையும் மீட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியாரிடம் கோரிக்கை.நடைபாதைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்து கடைகளால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அவல நிலை.திருப்பூர் பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களில் தங்களுடைய இஷ்டம் போல் விதிகளை மீறி சட்டவிரோதமாக திடீரென காங்கிரீட் மேடைகளும், இரும்பு டிவைடரும் வைப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள காங்கிரீட் மேடைகளும், இரும்பு டிவைடர்களை முற்றிலுமாக அகற்ற விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய கிருஸ்துராஜ் அவர்களை திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக சென்று சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…. திருப்பூரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள ரோடுகளில், கடைகளுக்கு முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென நடைபாதைகளையும், சாலையை தடுத்து காங்கிரீட் மேடைகளும், இரும்பு டிவைடர்கள் மற்றும் ‘நோ பார்க்கிங்’ டிவைடர்களை வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள காங்கிரீட் மேடைகளும், இரும்பு டிவைடர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அவிநாசி சாலை, பல்லடம் சாலை PN.ரோடு, குமரன் சாலை, டவுன்ஹால், பெரிய கடை வீதி, மார்கெட் வீதி, மங்கலம் சாலை , காங்கேயம் சாலை ,வாலிபாளையம் ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலை உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பிரதான ரோடுகளின் இரு புறமும், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வருவது வழக்கம்.இவ்வாறு வருவோர், தங்களது நிறுவனங்கள், கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் தங்களுடைய இஷ்டம் போல் விதிகளை மீறி சட்டவிரோதமாக திடீரென காங்கிரீட் மேடைகளும், இரும்பு டிவைடரும் சில இடங்களில், ‘நோ பார்க்கிங்’ டிவைடர் வைக்கப்பட்டிருக்கின்றன.இதேபோல் பல வீடுகளுக்கு முன்பும் ‘நோ பார்க்கிங்’ டிவைடர் வைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படுகிறது. இது போக்குவரத்து விதிமுறைக்கு எதிரான செயலாகும்.ஏற்கெனவே இதுபோன்று சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, போக்குவரத்து காவல் துறைக்கு முற்றிலுமாக அப்புறப்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகள், கடைகளுக்கு முன் சாலையில் எவ்வித முறையான அனுமதியின்றி நோ பார்க்கிங்’ என போர்டு வைத்து மறிப்பது முற்றிலுமாக தவறாகும். ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை காவல் துறை மட்டுமே வைக்க வேண்டும் மற்றவர்கள் யார் வைத்தாலும் அது சட்டவிரோத செயலாகும்.சிலர் தங்களது கடைக்கு விளம்பரம் செய்யும் வகையில் போர்டு வைத்து, வாகனம் நிறுத்த தடை விதிக்கின்றனர்.சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நடந்து செல்ல எந்த தடையும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.எனவே திருப்பூரிலுள்ள முக்கிய சாலைகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு திரையரங்கம், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு முன் வைக்கப்பட்டு இருக்கும், இரும்பு கிரில் மற்றும் டிவைடர்களை உடனடியாக அகற்ற போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு