ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – சீன வீராங்கனையை வீழ்த்தினார் சுதிர்தா

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஸு யு ஷெனை எதிர்த்து விளையாடினார். இதில் 104-வது இடத்தில் உள்ள சுதிர்தா முகர்ஜி முதல் செட்டை 10-12 என இழந்தார். எனினும் அடுத்த 3 செட்களையும் திறமையாக விளையாடி 11-8, 11-7, 11-7 என கைப்பற்றி வெற்றியை உறுதிபடுத்தினார்.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்குர், மனுஷ் ஷா ஜோடி உஸ்பெகிஸ்தானின் அப்துல் அசிஸ் அனோர்போவ், குட்பிடிலோ டெஷாபோவ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 11-1, 13-11, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஏஞ்சலினா ரோமானோவ்ஸ்கயா, சர்வினோஸ் மிர்கடிரோவா ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.