நமது எதிர்காலம் மற்றும் எழுச்சியூட்டும் கனவுகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான தாக்கத்திற்காக ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நேற்று ஆசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் சிறப்பம்சங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டிருந்ததாவது:
“நமது எதிர்காலத்தைக் கட்டமைப்பதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆசிரியர் தினத்தன்று அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் ஏற்படுத்தும் சிறந்த தாக்கத்திற்காக நாம் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.