மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில்
நடைபெற்ற தேசிய ஆயுஷ் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய அரசு ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அவர்களிடம் தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தொடர்பான
கோரிக்கைகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய அரசு ஆயுஷ்துறை இணை அமைச்சர் முஞ்சரப்பா மஹேந்திரபாய், கர்நாடகா மாநிலம் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டூராவ். ஒன்றிய அரசு ஆயுஷ்துறை செயலாளர் ராஜேஷ் கோட்டச்சே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர்
ககன்தீப் சிங் பேடி, ஒன்றிய ஆயுஷ் இணை செயலாளர் கவிதா கார்க். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.இராஜேந்திரன், மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.