இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்படுகிறது.

தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களில் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக இந்தியாவில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று டெல்லியிலும் அமைக்கப்பட உள்ளது. மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் வணிக வளாகத்தில் அமைய உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது.
அதைதொடர்ந்து, வரும் 20ம் தேதியன்று டெல்லியில் மற்றொரு விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. சாகெட் பகுதியில் உள்ள சிட்டிவாக் வணிக வளாகத்தில் தான் இந்த விற்பனை நிலையம் அமைய உள்ளது.

விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம், ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.