இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி

இந்திய இராணுவ சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி 4.1.2024 முதல் 13.1.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், (பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள் சேர்ப்பு பேரணி) நடைத்தப்பட உள்ளது.

இப்பேரணியில் கலந்து கொள்ளும் தமிழகத்தினை சார்ந்த விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்வில் கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். ஆனால் இத்தேர்வுக்கு தேவையான அசல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களை தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அறியாமல் இருப்பதால் கடின முயற்சி எடுத்தும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத
காரணத்தால் அவர்கள் தேர்வு செய்யப்படாத நிலை காணப்படுகிறது. எனவே, 4.1.2024 முதல் 13.1.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பேரணியில் தகுதியுள்ள
இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறும், அவ்வாறு கலந்து கொள்ளும் தமிழகத்தினை சார்ந்த மாணவர்கள் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் சென்னை-32, கிண்டியிலுள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அனுகலாம் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.