இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் (28). இவர் நேற்று முன்தினம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்றார். 3வது வாய்ப்பில் 21.20 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து புதிய சாதனையை படைத்தார். நடப்பு ஆசிய சாம்பியனான தஜிந்தர்பால் ஏற்கனவே தான் படைத்த தேசிய, ஆசிய சாதனைகளையும் முறியடித்துள்ளார். இது குறித்து பேசிய தஜிந்தர், ‘எனது முன்னேற்றத்துக்கு என்னுடைய பாட்டிதான் காரணம். கடற்படையில் எனக்கு வேலை கிடைக்கும் வரை எனது பயிற்சிக்கான எல்லா செலவுகளையும் என் பாட்டிதான் கவனித்துக்கொண்டார். அவர் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அந்த வேதனைக்கு இடையில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்த தகுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம். இந்த வெற்றியை என்னுடைய பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறினார்.
Ads by






