சென்னை:
இஸ்லாமியருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதனால் எத்தனை பேர் பயன்பெற்று உள்ளனர் என்று தமிழ் நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ப.மா.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பா.ம.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி பருகினார்.
நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இஸ்லாமியர்களுக்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக வெள்ளை அறிக்கை மூலம் விளக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா, பகுதிகள் அறிவிக்கப்பட்டதால் தஞ்சாவூர் நிலக்கரி எடுக்கும் முடிவு திரும்பப்பெறப்பட்ட நிலையில் நிலக்கரி விவகாரத்தில் தஞ்சைக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாமா என்று கேள்வி எழுப்பியவர் கடலூர் மாவட்டத்தை அளிப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுவதாக கூறியுள்ளார்.