1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
சமன்செய்து சீர்துாக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி. (குறள் : 118).
விளக்கம்:
சமமாக நின்று தன்னிடத்து வைத்த பொருளின் எடையை உள்ளவாறு
காட்டும் துலாக்கோல் போல உள்ளத்தில் சமநிலையாக இருந்து ஒரு பக்கம்
சாயாமல் உண்மையை வெளிப்படுத்தல் சான்றோர்க்கு அணியாகும்.
.






