சென்னை:
தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.காசிநாத துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்க உறுப்பினர் சோமு குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தன்னிச்சையாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்றுனர் பணியில் அமர்த்த சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு, மத்திய அரசின் ஆயுஷ் துறையின் யோக பயிற்றுனர்களை நிர்ணயித்த தகுதி மற்றும் வழிகாட்டுதல் சம்பந்தமான உத்தரவு நாள் 14.7.2020 மற்றும் மேற்படி உத்தரவு அடிப்படையில் மாநில அரசின் அரசு ஆணை 715 மக்கள் நல்வாழ்வுத்துறை நாள் 14.6.2021 ஆகியவை முறியதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேற்படி மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மாநில அரசின் ஆணைப்படி சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற யோகா பயிற்சியாளர்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் செய்ய வேண்டுமென உத்தரவு உள்ள சூழ்நிலையில், இந்த உத்தரவிற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் தன்னிச்சையாக விதிகளுக்கு புறம்பாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்சியாளர்களாக நியமிக்க செய்து அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சித்த மருத்துவ அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 233 சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற தகுதியான நபர்களை யோகா பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். உயர்நீதிமன்ற தடை ஆணையை எங்களைப் போன்று குறைந்த மாத சம்பளத்தில் பணியாற்றி வரும் யோகா பயிற்சியாளர்களின் வாழவாதாரத்தை பாதுகாத்துள்ளது சட்டம் மற்றும் நீதி வென்றுள்ளதாக எங்கள் சங்கத்தின் சார்பாக கருதுகிறோம். பல்வேறு சட்ட போராட்டம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டும் வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் பத்திரிரிகையாளர்கள் சந்திப்பு பேரணி நடத்தியும் எந்தவித பயனும் தாரத நிலையில் நாங்கள் நீதி மற்த்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் தரப்பு வாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பணியினை தொடர அரசு அனுமதிக்க வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக¢கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு