புதுடெல்லி:
13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய நிகத் ஜரீன்,5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார். இதன்மூலம் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 75 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினும், ஆஸ்திரேலிய வீராங்கனை கேயிட்லின் பார்க்கரும் மோதினர். இதில் லோவ்லினா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை வீழ்த்தி தங்கத்தை வென்று அசத்தினார்.
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நீது கங்காஸ் (48 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ) தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





