எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்

புதுடெல்லி:
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3) -ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.