பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வாா்டு-55 ஏழுகிணறு பகுதியில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.94.36 இலட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட உள்ள பல் நோக்குக் கட்டத்திற்கான பணியினை இந்து சமயம் மற்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வடக்கு வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் மண்டலக்குழு தலைவர் பி.ஸ்ரீராமுலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





