ஐ.நா நிலைப்பாடு என்ன ? இந்தியா என்பதை பாரத் என பெயர் மாற்றம்.

இந்தியா, தனது நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் ‘இந்தியா’ என்பது ‘பாரத்’ என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்னஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின், துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ‘துருக்கி நாடு துருகியே என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்’ என்றார். ஒன்றிய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை வந்தால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதிலாக இனி பாரத் என அழைக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.