புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்கிறது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் கடந்த இரண்டு இருமாத கொள்கை மதிப்பாய்வு கூட்டங்களிலும், ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் உள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இன்றி தொடரும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதனால் வாகனம், வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிததில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பதால் மாதம் ஈ.எம்.ஐ கட்டுபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





