கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரி குத்தி கொலை – போலீசார் தீவிர விசாரணை!

கர்நாடக அரசு துறையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த அந்த இறந்த பெண்மணி, பெங்களூருவில் சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

45 வயதான பிரதிமாவின் கார் ஓட்டுநர், வேலை முடிந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார், சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக பிரதிமா அந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று, பிரதிமாவின் கணவரும், மகனும் வீட்டில் இல்லாதபோது இரவு சுமார் 8:30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு முழுவதும் வீட்டில் பிரதிமாவின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரத்திமாவின் சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தான், ​​அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. முந்தைய நாள் இரவு அவருக்கு போன் செய்தேன், ஆனால் சகோதரி பதிலளிக்கவில்லை, அதனையடுத்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபரின் சாத்தியக்கூறு உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விசாரணை செய்து வருகின்றனர். கர்நாடக அரசில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு