சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டப்சபையில் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் கவர்னர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்கிறார். அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில் டெல்லி செல்கிறார். மேலும் பா.ஜ.க.விலிருந்து ஐ.டி. துறையில் உள்ளவர்கள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் டெல்லி செல்லும் அண்ணாமலை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 26ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு