திருச்சி:
டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.
இன்று கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கடைபிடிப்பதையொட்டி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் ரவுண்டானாவில் உள்ள மேஜர் சரவணன் நினைவுத் தூண் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், எம் பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.