கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர்; பிரக்ஞானந்தா அசத்தல்

சென்னை:
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான பிரக்ஞானந்தா 15&-13 புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-&9 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் பின்தங்கினார். இதையடுத்து இருவரும் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.
கிளாசிக்கல் பிரிவில் பின்தங்கிய நிலையில் கருனாவை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் விளையாடினார். இதில் ரேப்பிட் பிரிவில் இரண்டு ஆட்டங்களையும் பிரக்ஞானந்தா வென்றார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை நழுவ விட்டார் பிரக்ஞானந்தா, இறுதியில் 15-&13 என்ற புள்ளிகள் கணக்கில் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்றார்.
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்திய என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இதில் கருனா இரண்டாம் இடமும், வெஸ்லி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

தமிழக முதல்வர் வாழ்த்து

பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மன உறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே ஆந்திர பெண் மீது முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூர கொலை… நீடிக்கும் மர்மம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமம் எனும் கிராமம் உள்ளது. அங்குள்ள

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழக அரசு 6000 ரூபாய் உயர்த்த வேண்டும், உதவித் தொகைக்கு

தமிழக இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும்: முதலமைச்சர் விஜய் பதில் மனு

சென்னை:தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய்,

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்; உதயநிதி, எடப்பாடி வாதமும், அமைச்சர் பதிலும்

சென்னை:அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக இன்றைய சட்டசபை சட்டசபை கூட்டத்தின்போது திமுக,