திண்டுக்கல்:
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழக அரசு 6000 ரூபாய் உயர்த்த வேண்டும், உதவித் தொகைக்கு விண்ணப்பித்து 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகையை வழங்கிட வலியுறுத்தியும் மாநில முழுவதும் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செம்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமுத்தாய், துணைத் தலைவர் அம்சவள்ளி ஆகியோர் தலைமை தாங்கினர். திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தின் துணைத் தலைவர் பாலாஜி, ஆத்தூர் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சூசைமேரி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரஞ்சித், சங்க கிளை செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 150க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருவள்ளூர் அருகே ஆந்திர பெண் மீது முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூர கொலை… நீடிக்கும் மர்மம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமம் எனும் கிராமம் உள்ளது. அங்குள்ள






