சென்னை:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபை மகன் ஜெகன் (28) அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைமீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்தநிலையில் தருமபுரி – கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் சென்ற ஜெகனை மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் வெட்டி கொலை செய்தனர். பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரியில் உள்ள கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ வாலிபரை கொலை செய்த சங்கர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என்பது காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதி காக்கும் மண்ணாக இருக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணனம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து மனித நேய அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு