பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து யார் வேண்டுமானாலும் எந்த மதமாக இருந்தாலும் அதில் உள்ளதை குறித்து கருத்து சொல்லும் உரிமை இருந்தது.
ஆனால் இன்றைய நிலையில் அப்படி இல்லை இந்துத்துவத்தையும் சனாதனத்தையும் தவறு என்று ஒரு கிறித்தவர்
பேசினால் அது பெரிய குற்றமாகி விடும் மத கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்காகி விடுகிறது. ஒரு இஸ்லாமியர் இந்துமதம் பற்றியோ கிறித்தவ மதம் பற்றி பேச முடியாத சூழ் நிலை உருவாக்கப் பட்டுள்ளது இதனால் அந்தந்த மதத்தில் உள்ளவர்கள் அந்த மதங்களில் உள்ள குறைகளை பற்றி சுட்டி கட்டவும் பேசவும் உரிமை உள்ளது. இந்திய நாடெங்கிலும் சனாதனத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் சனாதனத்தை அழித்தே ஆக வேண்டும் என்று ஒரு பிரிவினரும் போராடி வருகின்றனர் இந்த நிலையில் மக்கள் மேம்பாட்டு கழகம் ஆயர்களை சந்தித்து பேச நேரம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளது காரணம் கிறித்தவ மதத்திலும் சனாதனம் இருக்கிறது அதையும் அழிக்க வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் போராடி வருகிறது.
இந்து சனாதனம் பற்றி பேசும் நாம் கிறித்தவ சனாதனத்தை பற்றியும் பேசியாக வேண்டும். ஏனென்றால் இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமை களை விட கிறித்தவ மதத்தில் இருக்கும் சாதி கொடுமை மோசமானது.
இந்து சனாதனத்தை பற்றி அம்பேத்கர் பெரியார் கலைஞர் ஸ்டாலின் திருமாவளவன் உதயநிதி போன்றவர்கள் இது குறித்து கிறித்தவத்திலும் பேசி வருகிறார்கள் ஆகையால் கிறித்தவத்திலும் சனாதனம் ஒழிய வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் வலியுறுத்தி வருகிறது.
தமிழக ஆயர் பேரவை மற்றும் பிற சபைகளின் ஆயர்களும் போதகர்கள் தங்களின் இறை மக்களுக்கு திருப்பலி மற்றும் வழிபாட்டு நேரங்களில் வெறும் ஜெபத்தை மட்டும் சொல்லி மக்களை ஏமாற்றாமல் பகுத்தறிவு ரீதியான அரசியல் அதிகாரம் பற்றியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் சமூகநீதி க்காகவும் பேச வேண்டும்
இன்னமும் ஆயர்கள் குருக்கள் பாஸ்ட்டர்கள் போதகர்கள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை சட்டத்தை
படிக்காமல் எல்லாம் தெரிந்தது போல் மக்களை ஏமாற்றி வருவது இவர்களின் பலகீனத்தை காட்டுகிறது
தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கிறது பிஜேபி ஆட்சியில் எந்தெந்த சட்டம் திருத்தம் செய்ய பட்டிருக்கிறதென்று எதுவுமே தெரியாது தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்பு சட்டம் 1989 பிரிவு என்னனென்ன சரத்துகளை கொண்டது எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்றும் அதற்குண்டான இழப்பீட்டு தொகை எவ்வளவு ரூபாய் என்று ஒரு கேள்வி எழுப்பி ஆயர்கள் குருக்கள் பாஸ்ட்டர்கள் போதகர்களுக்கு நீட் தேர்வு போல ஒரு டெஸ்ட் வைத்தால் ஒருவர் கூட தேர மாட்டார்கள் என சொல்லலாம்.
இந்த தகவல் ஒரு முன்னோட்டம் தான் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைர்களை சந்திக்க மறுக்கும் ஆயர்களை கூட இனி சட்டப்படி சந்திக்க வைப்போம் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றி காலந்தள்ள முடியும் இனி அது நடக்காது. செசாருக்கு உரியதை செசாருக்கும் கடவுளுக்குறியதை கடவுளுக்கும் கொடு இதை மட்டும் பைபிள் சொல்ல வில்லை கூடுதலாக ஒன்றை சொல்லி இருக்கிறது மக்கள் சக்தி மகத்தான சக்தி என்று சொல்லி இருக்கிறது அரசும் மதமும் மக்களுக்கு எதிராக மக்கள் உணர்ந்து விட்டால் தூக்கி எறிந்து விடுவார்கள்.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டு அவரவர் தங்களின் குறைகளை சரி செய்து கொண்டு கிறித்தவ மக்களின் வாழ்க்கை சிறந்த முறையில் அமைய அனைவரும் உழைக்க வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் தெரிவித்து கொள்கிறது.