குஜராத் மாணவி மதுரையில் பலாத்காரம்: 2 தமிழக மாணவர்கள் கைது

மதுரை:
ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரை வந்து உள்ளார். தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். கருத்தரங்கிற்காக வந்து அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில், மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருந்தும், உணவும் வாங்கிக் கொடுத்து உள்ளனர். உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்து உள்ளார்.மாணவியை இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
குஜராத் திரும்பிய மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து உள்ளூர் போலீசில் புகாரளித்து உள்ளார். இது தொடர்பாக மதுரையில் புகாரளிக்க அவர்கள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாணவி புகார் அளித்து உள்ளார். இதையடுத்து உதவி ஆணையர் காமாட்சி, மாணவியிடம் வாட்ஸ்அப் வீடியோவில் நடத்திய விசாரணையின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.